11/20/2015

போலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில் வெடிகுண்டு

விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பறந்துகொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
 
போலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானம் ஒன்றே, இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
161 பேருடன் சென்ற குறித்த விமானத்திலிருந்த 60 வயதான பயணி ஒருவர், விமானத்தில் குண்டு இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, விமானம் உடனடியாக பல்கேரியாவின் பெர்கஸ் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
 
பயணிகள் அனைவரையும் அவசரமாக வெளியேற்றப்பட்டு, பரிசோதனை செய்த வேளையில், அதில் எவ்வித வெடிகுண்டும் இருக்கவில்லை என்பது தெரியவந்தது.
 
பின்னர் குறித்த பயணி கைது செய்யப்பட்டு, மது அருந்தியுள்ளாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
 
இதே வேளை குறிப்பிட்ட இடைவெளியில் விமான நிலையம் மூடப்பட்டதோடு, விமான போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment