உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/30/2015

ஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுறாவின் ‘அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை’ கவிதை தொகுப்பு நூல்களுக்கான வெளியீடும்-வாசிப்பும் நிகழ்வு

கணிசமான இலக்கிய ஆர்வலர்கள் சமூகமளித்திருந்தனர். கற்சுறாவின் கவிதை தொகுப்பு விமர்சனத்தை விஜியின் அறிமுக உரையை தொடர்ந்து நெற்கொழுதாசன், தர்மினி, சிசிலி தர்சன் என மூவரும், இத் தொகுப்பிலுள்ளவை கவிதையா! புதிர்களா! எனும் வகையில் ஒவ்வொருதரும் தமது வாசிப்பு அனுபவத்தை வெவ்வேறு பார்வையில் முன்வைத்தார்கள்.
‘லெனின் சின்னத்தம்பி’ நாவல் மீதான விமர்சனப்பார்வையை புஸ்பராணியின் அறிமுக உரையை தொடர்ந்து இரயாகரன், தர்மு பிரசாத், தில்லைநடேசன் தங்களது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள். தேவதாசன், மனோ, லக்சுமி, அசுரா, விஜி, காசிலிங்கம், யோகரட்ணம், மாயவர், நெற்கொழுதாசன், இரயாகரன், தில்லை நடேசன் போன்றோர் கவிதை, நாவல் மீதான கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள். நூல்குறித்த அனைத்து விமர்சனங்களையும் தனது எழுத்து முயற்சிக்கான ஆரோக்கியமான அம்சமாகவே தான் கருதுவதாகவும், மேலும் தனது நூல் குறித்த விமர்சனத்தை மேற்கொண்ட இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் தனது ஏற்புரையில் ஜீவமுரளி தெரிவித்தார்.
கணணி தொழில் நுட்பத்தில் ஆர்வமுள்ள சிற்பி எனும் சிறுவன் இந்நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு பணியில் தனது பங்களிப்பை நல்கினார்.

0 commentaires :

Post a Comment