11/21/2015

ராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா?

Afficher l'image d'origineயாழ் குடா நாட்டில் காணப்படும் தீவான நாக தீபத்தை, நயினா தீவாக பெயர் மாற்றம் செய்ய வடமாகண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
கடந்த 5ம் திகதி வடமாகண சபை அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை நயினா தீவு பெயர் விவகாரத்தில் மூக்கை நுழைத்து இருக்கும்  இராவண பலய என்ற தீவிரவாத அமைப்பினர் அதன் பெயரை நாக தீப எனவே பேண வேண்டும் என கூக்குரலிடுகின்றனர்.


இந்நிலையில் இப்படியொரு நிலைமை உருவாகும் பொது வானுக்கும் மண்ணுக்கும் துள்ளி குதித்து தமிழ் மக்களின் உரிமை காக்க போராடுவதாக காட்டிக்கொள்ளும் மனோகணேசன் தற்போது ஆட்சியில் அமைச்சராக உள்ளார்.  இப்போது மகிந்த களத்தில் துள்ளிகுதித்ததை போல் எல்லாம் செய்யமுடியாது. அடக்கி வாசிக்க விட்டால் ரணில் அவரை தூக்கிவீசவும் பின்னிக்கமாட்டார். அது அவருக்கும் நன்கு புரியும் எனவே  தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் இப்போது பட்டாளத்தில் கட்டெறும்பு கடித்த கதையாக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றார்.

 தமிழ் இந்துக்கள் இந்த தீவின் பெயரை நயினாதீவு என்றும், சிங்கள பௌத்தர்கள் நாகதீப என்றும் பேச்சு வழக்கில் அழைத்துக்கொள்ளட்டுமே. என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.இது எப்படியுள்ளது பாலுக்கும் காவல் பூனைக்கும்  தோழன்.

0 commentaires :

Post a Comment