11/16/2015

கோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Afficher l'image d'origineமதுவிலக்கு தொடர்பாக பாடல் பாடியதாக கைது செய்யப்பட்டுள்ள மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக் குழுவின் தலைவர் கோவனுக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மதுக் கடைகளை மூடக் கோரி தமிழக அரசுக்கு எதிராகப் பாடியதாக, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக் குழுவின் தலைவர் கோவன் அண்மையில் திருச்சியில் கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கோவனிடம் 5 நாள்கள் விசாரணை செய்வதற்கு சென்னைப் பெருநகரக் காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் எழும்பூர் பெருநகரத் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி,  கோவனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
கோவனின் போலீஸ் காவலை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவனின் போலீஸ் காவலுக்கு தடைவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி என். ஆதிநாதன், கோவனுக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டார்.
ஐந்தாயிரம் ரூபாய்க்கான இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். காவல் துறை அழைக்கும் பட்சத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

0 commentaires :

Post a Comment