11/16/2015

வாயை பிளக்கும் வம்பு வின்

Tamilwinபிள்ளையானும் பிரசாந்தனும் சிறையில் ஆனால் கட்சியின் நிகழ்வு நடைபெற்றது என வாயை  பிளந்திருக்கின்றது பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த தமிழ்வின். தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முன்னாள் தலைவரின் ஏழாவது நினைவுதினம் நேற்று மட்டக்களப்பில் வழமைபோல் இடம்பெற்றமை குறித்து செய்தி வெளியிடும் போதே இந்த வம்பு வின் மேற்படி குறிப்பிட்டுள்ளது.

*ஏன் நீங்கள் பிள்ளையான் குழு, பிள்ளையான் குழு, என்று கிழக்குமாகாணத்தில் உருவாகிய ஒரு கட்சியை காய்ந்தது பொய்யாகி விட்டதென்ற ஏக்கமா?
*தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்கின்ற வரலாற்று நிஜத்தை ரணிலுடன் சேர்ந்து பழிவாங்கி அழிக்கமுனைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனவு கானல் நீராகி விட்டதென்ற துக்கமா?  

போதாக்குறைக்கு இவர்கள் இருவரும் கொலை குற்றசாட்டில் கைதாகியுள்ளவர்கள் என்று மீண்டும் முணு முணுப்பு வேறு. பழிவாங்கலுக்காக  கைதான முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் மீது என்ன குற்றம் போடுவதென்று தெரியாமல் தமிழீழ விடுதலை புலிகளை மீள உயிர்ப்பிக்க முயன்றார் என்கின்ற குற்றம்தான் பதிவாகியுள்ளது. இது பகிரங்கமாக வெளியாகிய செய்தி.அதன் பின்னரும் கொலை குற்றம் என்று ஓயாது புலம்பும் தமிழ் வின்னுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மீன்பாடும் தேன் நாடான் 

0 commentaires :

Post a Comment