11/22/2015

வட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


வட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் நாம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வீடுகளையும், காணிகளையும் வலிந்து பறித்து வைத்திருக்கும் படையினர் எங்கள் வாழ்வாதாரத்தையும் அழித்துள்ளதுடன் தமிழ் மக்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என்ற கண்னோட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும்,
ஆட்சி மாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்னர் படையினரின் கடந்தகால செயற்பாடுகள் முடக்கப்பட்டு அவர்கள் படைமுகாம்களுக்குள் இருக்கிறார்கள் என்பதல்ல உண்மை, அவர்கள் தற்போதும் கடந்தகால செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மையானது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியுள்ளார் 

0 commentaires :

Post a Comment