உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/12/2015

குமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

Résultat de recherche d'images pour "குமார் குணரத்தினத்"மைத்திரி - ரணில் கூட்டாட்சி அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியான; கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்களிற்காக உயிராபத்தினால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் திரும்ப வந்து செயற்படலாம் என வாக்குறுதிக்கமைய, இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்த முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு மறுமொழி ஏதும் வழங்காது, அவரை கைது செய்து தடுத்து வைத்துள்ள நல்லாட்சி அரசு,  எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைத்துள்ளது.
கடந்த நவம்பர் 27ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குமார் குணரட்னத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment