உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/02/2015

நான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்து சொல்லுங்கள்-முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன்

  Afficher l'image d'origineகடந்த ஒக்டோபர்  மாதம் 11ம் திகதிமுதல் கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பொய் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன்  இன்று புதனன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர் அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் மட்டக்களப்பு சிறைசாலை விளக்கமறியலில் வைக்குமாறும்  நீதிபதி அப்துல்லா உத்தரவிட்டார். அப்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து சொன்ன முன்னாள் முதல்வர் "ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலை தொடர்பாக நான் குற்றவாளியில்லை" என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்து சொல்லுங்கள்என கூறினார் . 
இவர் கைது செய்யப்பட்ட போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலை தொடர்பாகவிசாரனைகள் இடம்பெற்ற போதிலும் பின்னர் புலிகளை மீள உயிர்ப்பிக்க முயற்சித்தார் என்னும் பெயரிலேயே குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எப்படியாவது தமிழ் மக்கள் விடுதலை புலிகளை அழித்தொழிக்கும் அரசியல் பழி வாங்கலே இக்கைதின் அடிப்படையாகும் என்பது புலனாகின்றது.

0 commentaires :

Post a Comment