12/06/2015

இன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்துரையாடலும் நூல் வெளியீடும்

Afficher l'image d'origineதமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், அரசியல்- சமூகப் பொருளாதார- சமத்துவ மேம்பாட்டிற்காகவும், ஒரு தேசம் ஒன்றை நிர்மாணம் செய்வதற்கான கட்டுமானங்களை நடைமுறைப்படுத்தி தன்வாழ்வை எமக்காக அர்பணித்து வாழ்ந்த டேவிட் ஐயா அவர்கள் பற்றிய நினைவுப் பகிர்வும்- கலந்துரையாடலும் இன்று டிசெம்பர் மாதம் 6ம் திகதி ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து பிற்பகல் 8 மணிவரை பாரீசில் பின்வரும் முகவரியில் ந டைபெற இருக்கிறது.
இடம்: SALLE SANT BRUNO
9 , RUE SANT BRUNO
75018 PARIS
Métro : LA CHAPELLE
இந் நிகழ்வில் பி.ஏ காதர் அவர்களின் ‘இலங்கை தேசிய இனப் பிரச்சனையும் டேவிட் ஐயாவும்’ என்ற தலைப்பிலான உரையும், ‘அர்ப்பண வாழ்வில் வலிசுமந்த மனிதன் ‘எனும் டேவிட் ஐயா பற்றிய நூல் வெளியீடும், அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது.
காந்திய - சமூக செயற்பாட்டாளர் இ.பூபாலசிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தோழமையோடு அழைக்கின்றோம்.

0 commentaires :

Post a Comment