12/03/2015

வடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆணைக்குழுவும் இணைந்து சட்டவிரோதமான முறையில் செயற்படுகின்றது

வடக்கு மாகாண சபையினால்முகாமைத்துவ உதவியாளர்களை உள்ளீர்ப்பதற்கான பரீட்சை நடைபெற்று பரீட்சை தாள்களும் திருத்தப்பட்டு புள்ளிகள் எல்லாம் பட்டியலிடப்பட்டுள்ளனவாம். ஆனால் பரீட்சாத்திகளுக்கு புள்ளிகள் தெரிவிக்கப்படவில்லை. 

தற்போது நியமன நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமையாக பெறுபேறுகளை வெளியிடும் வடக்கு மாகாண சபை இணையத்தளமும் இருட்டடிப்பு செய்துள்ளது. வடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆணைக்குழுவும் இணைந்து சட்டவிரோதமான முறையில் செயற்படுகின்றது. 

பல்வேறு கேள்விகளை சபை அமர்வுகளில் எழுப்பும் மாகாண சபை உறுப்பினர்கள் இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டும். பெறுபேறுகளை மறைத்து விட்டு தமக்கு வேண்டியவர்களுக்கு நியமனம் வழங்கும் அநியாயம் ஆளுநரினாலும் முதலமைச்சரினாலும் சீர்செய்யப்பட வேண்டும். நம்பி வாக்களித்த மக்களுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இதையாவது செய்ய வேண்டும் 

0 commentaires :

Post a Comment