12/07/2015

மட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய அபாயம்

Map of Batticaloa, Sri Lankaமட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து அனர்த்த முகாமைத்துவம் சார் தரப்பினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பேரவையின் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின் படி ஆய்வுகளை மேற்கொண்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வருடத்தில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அத்துடன் சூறாவளி அனர்த்தங்களும் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment