உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/08/2015

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அகதிகள் பணமும் நிவாரணப்பொருட்களும் வழங்கினர்.

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, கன்னியாகுமரி மாவட்ட இலங்கை அகதிகள் பணமும் நிவாரணப்பொருட்களும் வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம்  பெருமாள்புரம், பழவிளை, ஞயுறான்விளை மற்றும் கோழிவிளை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியை சார்ந்த இலங்கை அகதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் விதம் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான துணிமணிகள், போர்வைகள் மற்றும் 13,370 ரூபாய் காசோலை ஆகியவற்றை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரண பொது மையத்தில் இன்று வழங்கினர். 

தமிழகத்தில் அகதிகளாய் வாழ்ந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்த இலங்கை அகதிகளை அரசு அதிகாரிகளும், பொதுமக்களும்  பாராட்டினர். 

0 commentaires :

Post a Comment