2/10/2016

ஞானசார 16 வரை விளக்கமறியலில்


ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து, பிரதீப் என்னலிகொடவின் மனைவி சந்யா எக்னலிகொடவை மிரட்டியமை தொடர்பில் பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி 16 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
 
ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சந்தேகநபரை இன்று (10) ஆஜர்படுத்தியபோதே அவர் இவ்வுத்தரவை வழங்கினார்.
 
வழக்கு தொடர்பில், சாட்சியாளரை பாதுகாக்கும் சட்டத்தின் அடிப்படையில், சாட்சியாளரை மிரட்டிய சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதற்கு, நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என, வாதி தொடர்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
 
குறித்த சட்டம் தொடர்பில், சிக்கல் காணப்படுவதால், இது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தை வழங்குமாறு நீதவான் இரு தரப்புக்கும் உத்தரவிட்டார்.
 
அது வரை ஞானசாரரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

0 commentaires :

Post a Comment