2/12/2016

புதிய அரசியல் யாப்புக்காக தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் தமது பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்

Afficher l'image d'origineஇலங்கையில் மிக விரைவில் புதிய அரசியல்அமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய அரசியல் யாப்பு மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளிலும் மாற்றங்கள் நிகழும் எனும் நம்பிக்கைகளும் மேலோங்கி வருகின்றது.
இத்தருணத்தில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் தலித் சமூக அரசியல்-சமூக மேம்பாட்டை கருத்தில்கொண்டு  சில பரிந்துரைகளை  முன்வைத்துள்ளனர்.

அந்தவகையில் இப்பரிந்துரைகள் இலங்கையிலுள்ள புதிய அரசியல் சாசன நிர்ணய சபைக்கும் சகல தமிழ், சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசியல் யாப்புக்காக தலித் சமூக மேம்பட்டு முன்னணியினர் அனுப்பி வைத்துள்ள பரிந்துரைகள் கீழ்வருமாறு.1 - தேர்தல்கள் மூலம் உருவாக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதித்துவ சபைகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களின் குரல்களை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் விசேட நியமன பிரதிநிதித்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

2 - சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காணி, வீடு போன்ற அடிப்படை வசதிகளை உத்தர           வாதப்படுத்தும் நோக்கில் விசேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

3 - வடகிழக்கு பிரதேசங்களில் (குறிப்பாக வன்னி) வாழும் மலையக வம்சாவழி மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும்.

4 - சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஒரு விசேட ஆணைக்குழு  நியமிக்கப்பட வேண்டும். இவ்வாணைக்குழு சமூக பொருளாதாம், கல்வி, குடியிருப்பு மற்றும் சட்டரீதியாக அடையாளம் காணப்படுகின்ற சகல துறைகளிலும் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் சமூகநிலையினை ஆய்வுசெய்து தீர்வுகளை முன்மொழிய வேண்டும்.

அ. மேற்படி ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே இருப்பதோடு மேலும் முஸ்லிம், சிங்கள பிரசைகளையும் உள்ளடக்கியவர்களாக அமைதல் வேண்டும்.

5 - மனித உரிமைகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைக்கு துணைபோகும் யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்திற்கு இன்றுவரை வழங்கப்பட்டுவருகின்ற சட்ட அங்கீகாரம் நீக்கப்பட வேண்டும்.

6 - சாதிய ரீதியாக செய்யப்பட்டு வரும் தொழில்களுக்கு மாற்றீடாக அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் ஊடாக துறைசார் பயிற்சி நெறிகள் உருவாக்கப்பட வேண்டும்.

0 commentaires :

Post a Comment