2/06/2016

மு.சோ.கட்சி குணரத்னம் தொடர்ந்து விளக்கமறியலில்


வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் என அழைக்கப்படும் பிரேம் குமார் குணரத்னம் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
கேகாலை நீதவான் அல்விஸினால் இன்றைய தினம் (05) குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
 
இவர் கடந்த வருடம் நவம்பர் 04ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment