உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/13/2016

எலும்புத்துண்டுகளுக்கு அலையும் எம்.பி அமல்


மட் /பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக ஜனாதிபதியால் நியமனம்!
பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அவர்கள் கடந்த 03.03.2016 அன்று பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேச ஒருங்கமைப்பு குழு இணைத் தலைவராக (CO-CHAIRMAN) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.சுமார் 65 வருட கால தமிழரசு கட்சியின் வரலாறு தமிழ் மக்களின் இருண்ட காலம் என எழுதப்பட வேண்டியதொன்று. அதாவது உரிமை போராட்டம் என்னும் போர்வையில் தமிழ் மக்களின் அனைத்து வளங்களையும் அழித்தொழித்த அரசியலை வழிநடத்தியவர்கள் இந்த தமிழரசு கட்சியினர் ஆகும்.காலத்துக்கு காலம் தமது பதவிகளை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மக்களின் நலன்கள் சார்ந்த அனைத்து வேலைத்திட்டங்களையும் புறக்கணித்தும் பகிஸ்கரித்தும்  வந்த மக்கள் நல விரோத கும்பல்கள் இவர்கள்.

அதேவேளை வேறு யாராவது தமிழ் பிரதிநிதிகள் அரசுடன் இணைந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அதனை அரச கைக்கூலிகள்,துரோகிகள்,ஒட்டுக்குழுக்கள், ஓணான் குழுக்கள்,எலும்பு துண்டுகளுக்கு அலையும் நாய்கள் என்று கூட நாகூசாமல் தூற்றி வந்தவர்கள் இவர்கள்.ஆனால் இப்போது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கும் பிரதேச அபிவிருத்தி தலைவர் பதவிக்கும் நாயை அலையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை பார்க்க கேவலமாக உள்ளது.நல்லையாவும் அல்பர்ட் துரையப்பாவும் ராஜன் செல்வநாயகமும்,பிள்ளையானும் டக்ளசும் கருணாவும் துரோகி என்றால் இவர்களும் துரோகிகளே!

0 commentaires :

Post a Comment