உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/03/2016

இந்தியா போனால் சீனா வரும்"" என்று ரணிலின் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் எதிர்கட்சி தலைவர்

சம்பூரில் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

திருகோணமலை மாவட்டம் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டாம், நிர்மாணப் பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி நேற்று (02.03.2016) அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த சம்பந்தன் எம்பி. "போன காணி கை விட்டு போய் விட்டது. இங்கிருந்து இந்தியா போனால் சீனா வரும்"" என்று ரணிலின் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கினார்.  இதுவே மகிந்தவின் ஆட்சியாக இருந்தால் சம்பூர் அணுமின் நிலையத்த மூடக்கோரும் மக்களுடன் சேர்ந்து அவரும் அமர்ந்து மகிந்த அரசு எண்கள் காணிகளை விடுவிக்கும் வரை எமது அகிம்சை போராட்டம் தொடரும் என்று முழங்கியிருப்பார்.சிலவேளை சிறிதரனும் சிவஜிலிங்கமும் அறியேந்திரனை அழைத்துக்கொண்டு வந்து சம்பந்தருக்கு முன்னரே அங்கே அமைந்திருப்பார்கள் .

என்ன செய்வது ஐக்கிய தேசிய கட்சிக்கும்  தமிழரசுக்கட்சிக்கும் ஒரே எஜமான் என்பதால் இந்த ஐந்து வருடங்களிலும் சிங்கள ஆட்சி என்றெல்லாம் சத்தம் போடா கூடாதுத்தானே!
இந்தக் கருத்தால் கொதிப்படைந்த மக்கள் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சுற்றி வளைத்து எங்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள் நினைத்தால் தீர்வினைப் பெற்றுத் தர முடியும் என ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பினர்.
குறித்த கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாமல் திணறிய சம்பந்தன் எம்.பி முகத்தை திருப்பி நின்றார். பின்னர் சிறிது சமாளித்துவிட்டு பாதுகாப்புடன் பஜிரோவில் ஏறிச் சென்றார்.
சூழலை பாதுகாப்போம் – எதிர்காலத்தை காப்போம், எமது சூழலை பாதிக்கும் அனல் மின் நிலையத்தை ஆரம்பிக்காதே!, இந்திய வல்லரசின் நன்மைக்காக வாழ்வை அழிக்காதே போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கூனித்தீவு, கட்டைப்பறிச்சான், சேனையூர், சூடக்குடா, கடற்கரைசேனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

0 commentaires :

Post a Comment