4/28/2016

தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியராக றிமீஸ்அப்துல்லா: பல்கலை 20வருட வரலாற்றில் முதலாவது பேராசிரியர்

!
   

தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் 20வருடகால வரலாற்றில் முதலாவது பேராசிரியராக தமிழ்த்துறைத்தலைவராகவிருந்த றமீஸ் அப்துல்லா என பிரபலமாக அழைக்கப்படும் கலாநிதி.எம்.எ.எம்.றமீஸ் தெரிவாகியுள்ளார்.
தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முதலாவது முழுமையான பேராசிரியராகத் தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி றமீஸ்அப்துல்லா சம்மாந்துறையைச் சேர்ந்தவராவார். அவருக்கு வயது 47 ஆகும். சிறந்த திறனாய்வாளரும் கவிஞருமாவார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநதிகள் மற்றும் பல்கலைக்கழக உயர்நிருவாகிகள் பங்கேற்ற நேர்முகப்பரீட்சையினடிப்படையில் மெரிட் அடிப்படையில் முழுமையான முதல் பேராசிரியராக றமீஸ்அப்துல்லா தெரிவாகியுள்ளார். இவர் மேலும் 10வருடங்களுக்கு மேலாக பேராசிரியராக சேவையாற்ற வாய்ப்புள்ளதால் வாழ்நாள் பேராசிரியராக மிளிரவாய்ப்புள்ளது.
தமிழத்துறை சிரேஸ்ட்ட விரிவுரையாளராகவிருந்த கலாநிதி றமீஸ்அப்துல்லா இனிமேல் பேராசிரியராக சேவையாற்றுவார்.
அம்பாறை மாவட்டத்தின் 3வது தமிழ்த்துறைப்பேராசிரியர்!
அம்பாறை மாவட்டத்தின் மூன்றாவது தமிழ்த்துறைப் பேராசிரியராக றமீஸ்அப்துல்லா விளங்குகிறார்.
அம்பாறை மாவட்டத்தின் முதலாவது தமிழத்துறைப்பேராசிரியராக காரைதீவைச்சேர்ந்த உலகின் முதல் தமிழத்துறைப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்தர் திகழ்கிறார். இவர் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் இலங்கை பல்கலைக்கழகத்திலும் தமிழத்துறைப்பேராசிரியராக சேவையாற்றியவராவார்.
இரண்டாவதாக கல்முனையைச்சேர்ந்த கலாநிதி எம்.எ.நுகுமான் தமிழத்துறைப்பேராசிரியராக பேராதனைப்பல்கலைக்கழகத்தில் விளங்கினார்.
தற்போது மூன்றாவதாக சம்மாந்துறை மண்ணைச்சேர்ந்த கலாநிதி றமீஸ்அப்துல்லா பேராசிரியராகத் தெரிவாகியுள்ளார்.


நன்றி-காரைதீவு நிருபர் சகா

0 commentaires :

Post a Comment