4/23/2016

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் கருணாநிதி

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. வரும் தேர்தலில் பெரும் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்று அவர் தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றஞ்சாட்டினார்.
இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அனைவரும் பங்கேற்றனர்.
சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்திற்குப் பிறகு மரக்காணம், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
திங்கட்கிழமையன்று திருவாரூரில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் கருணாநிதி, 28ஆம் தேதிவரை தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்.
அதன் பிறகு மே 1ஆம் தேதியன்று பிரச்சாரத்தை மீண்டும் துவங்கும் கருணாநிதி 14ஆம் தேதிவரை பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

0 commentaires :

Post a Comment