4/24/2016

பழிவாங்க படும் அருந்ததிய மக்களின் உரிமை செயல்பாட்டாளர் கவிஞர் ...மதிவண்ணன்

Résultat de recherche d'images pour "கவிஞர் ...மதிவண்ணன்"

தமிழ் கவிதை சூழலில் தலித் கவிதைகளின் வழியாகவும் மேலும் ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களின் உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்பவராகவும் உள்ள செயல்பாட்டாளர் கவிஞர் ...மதிவண்ணன். இவரின் இயற்பெயர் ம.மோகன்ராஜ் மாணிக்கராஜ் என்பதாகும். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை,அரசு போக்குவரத்து கழகத்தின் ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ் ரே பிரிவில் பணிபுரிந்து வருகின்றார்.

அருந்ததிய மக்களின் அரசியல் உரிமைக்களை முன்னெடுத்த காரணத்தால் இவர் மீது உள்ளூர் ஆளும் கட்சி மந்திரி வகையறாக்களுக்கு கோபம் இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக இவரை எப்படியாவது பழி வாங்கி பணியிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்ற ஒரு பகை உணர்ச்சி உருவாக்கப்பட்டடிருக்கின்றது. தற்போது மேற்கண்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராகஉள்ள டாக்டர். ராஜேந்திரன் என்பவர் உள்ளுர் ஆளும் கட்சியினரின் பாசத்தைப்பெறவேண்டும் என்பதற்காக கவிஞர் மதிவண்னனை ஏதாவது செய்து தேர்தலுக்குள் பணியிடை நீக்கம் செய்துவிடவேண்டும் என துடிதுடித்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாக தினமும் அவர் பணி புரியும் பகுதிக்கு சென்று அவருடன் வேலை செய்யும் ஊழியர்களை கடுமையாக பேசுகின்றார். மேலும் கடந்த பத்து வருடத்திற்கு முன் மதிவண்ணன் சக ஊழியரிடம் சப்தம் போட்டதாக ஒரு மெமோ கொடுத்து விளக்கம் கேட்டுள்ளார். எக்ஸ்ரே பிரிவு ஊழியர்களுக்கு தமிழக அரசு நிர்ணயித்த ஏழு மணி நேர பணி காலத்தைக்காட்டிலும் கூடுதலாக பணி செய்யவேண்டும் என நிர்பந்தித்துள்ளார். நாள் தோறும் ஒரு மெமோ என்று சுமார் பத்துக்கும் மேற்பட்ட மெமோக்களை கொடுத்துள்ளார். மேலும் கவிஞர் மதிவண்ணன் தன்னிடம் வந்து மன்னிப்புக்கேட்டு மன்றாடினால் அவரை பணி நீக்கம் செய்யாது வேறு ஊருக்கு மாற்றி விடுவதாக தூது அனுப்பியும் உள்ளார். இதன் தொடர்ச்சியாக வரும் திங்கள் கிழமை விசாரனை என்ற பெயரில் ஒரு கட்டபஞ்சாயத்து செய்ய ஒரு கூட்டத்தை தயார் செய்துள்ளதாகவும், சிலரை பொய் சாட்சி சொல்ல நிர்பந்திப்பதாகவும் தெரிகின்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் தன்னை ஒரு ஆதிக்க சாதி பிரதிநிதி என காட்டிக்கொள்வதற்காக தாழ்வு மனப்பான்மையுடன் இது போல செயல்படுவதாகவும் அறிய முடிகின்றது. மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள ஒரு டாக்டர் தனது தகுதியை மறந்து ஆளும் கட்சி ஜால்ராக்கள் மற்றும் சாதிய சக்திகளுக்காக அருந்ததிய மக்களின் பிரதிநிதியாக நின்று அறிவுசார் செயல்பாட்டினை முன்னெடுக்கும் கவிஞர் மதிவண்னனை தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராகவும், சாதி பாகுபாட்டுடனும் , காழ்புணர்வுடன் செயல்படும் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். ராஜேந்திரன் என்பவர் அந்த பதவி வகிக்க தகுதியற்றவர் என்பது மட்டுமல்ல சனநாயக விரோத செயல்களில் ஈடுபடுபவராகவும் உள்ளார். இந்த தாக்குதலிலிருந்து கவிஞர் மதிவண்னனை பாதுகாப்பது மட்டுமல்ல அவருக்கு பக்கபலமாக நிற்பதும் சனநாயக சமூகத்தின் கடமையாகும்.

0 commentaires :

Post a Comment