4/28/2016

சுவிட்சர்லாந்தில் கிழக்கின் இளையோருக்கான ஒன்றுகூடல்


கிழக்கு உதயம் அமைப்பினர் மாகாண இளையோரை ஒன்றிணைப்பதற்கான முன்னெடுப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர். மாகாண அபிவிருத்திக்காக ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக செயற்பட்டுவரும் மேற்படி அமைபினர் தமது எதிர்கால நடவடிக்கைகளை விஷ்தரிக்கும் நோக்கில் இத்திட்டத்தினை தீட்டியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
எதிர்வரும் மே 1ம் திகதி Gemeinschaftszentrum Telli, Girixwe...g 12, Aarau எனுமிடத்தில் ஓழுங்கு செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடலுக்கு சுவிட்சர்லாந்து வாழ் கிழக்கிலங்கையின் இளையோருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அவ்வமைப்பினர் , அன்றைய தினம் இளையோர் தமது தாயகத்திற்கு எவ்வாறு உதவலாம் என எடுத்துரைக்கவுள்ளதுடன் , சின்னா பின்னாமாக சிதறிக்கிடக்கும் கிழக்கிலங்கை மக்கள் ஒன்று சேரவேண்டியதன் முக்கியத்தையும் எடுத்துரைக்கவுள்ளனர் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment