4/05/2016

வானமழை மேகத்துக்கு மண்ணின் மரியாதை !

வானமழை மேகத்துக்கு
மண்ணின் மரியாதை !
மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவ செல்வங்கள் 2015ல் முதன்முறையாக நடைபெற்ற க.பொ.த (உ/த) தொழினுட்பவியல் பிரிவு பரீட்சையில் மாவட்டத்தின் முன்னணி நிலைகளை கைப்பற்றியுள்ளனர் என்பதை மிகவும் மகிழ்வோடு நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

பல சவால்களுக்கு மத்தியில் இப்பிரிவை கொண்டுவந்து சேர்த்தவர் எமது கிழக்கின் முதலாவது முதல்வர். அவரே உத்தியோகபூர்வமாக 15-07-2015 அன்று காலை 6.30 மணிக்கு இப்பிரிவை ஆரம்பித்து வைத்தார். கௌரவ சி.சந்திரகாந்தன் அவர்களுக்கு எனது நன்றிகள் !

மாவட்டத்தின் 2nd, 3rd, 4th, 5th, 6th, 8th, 9th நிலைகளும் 60க்கு உட்பட்ட மேலும் பல நிலைகளும் இப்பாடசாலைக்கு கிடைக்கப்ப்ற்றுள்ளன.
ஆசிரியர்கள் கிடைக்கப்பெறாதிருந்த போதும் பாடசாலையில் இருந்த ஆசிரியர்களுடன் ஆசிரியர்கள் அல்லாத எனது நண்பர்களும் சகோதரர்களும் எம்மோடு இணைந்து கற்பித்து இச்சதனையை நிலை நாட்ட உதவினர்.அவர்களுக்கும் எனது நன்றிகள் !!

நன்றி
*முகனூல் Ravi Thinakaran

0 commentaires :

Post a Comment