5/08/2016

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் தமிழ்ப் புலவர் ஒளவையார் சிலை


மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகில் தமிழ்ப் புலவர் ஒளவையார் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு வேல்முருகன் வர்த்தக நிறுவனத்தின் நாற்பது ஆண்டுகால வர்த்தக நிறைவை பூர்த்தி செய்வதனை இட்டு வேல்முருகன் குடும்பத்தினரால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வர்த்தக சங்கம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள வர்த்தக சங்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிலை திறப்பு விழா சிப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் தலைவா சுவாமி பிரபுபிரபானந்த ஜி மகராஜ்,மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட மதத்தலைவர்கள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் சிறை திரை நீக்கம் செய்துவைக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தினால் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் சிலையினை நிறுவிய வேல்முருகன் குடும்பம் சார்பில் சிவபாதசுந்தரம் அவர்கள் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

0 commentaires :

Post a Comment