உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

6/03/2016

தூங்கு மஸ்தான் தூங்கு

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், இன்று வியாழக்கிழமை (02) நடைபெற்றது.Afficher l'image d'origine
இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
முல்லைத்தீவு வைத்தியசாலை காணி தொடர்பில்,  நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பாக, இந்த கூட்டத்தின் போது நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு அதற்கான உரிய தீர்வும் எட்டப்பட்டது.
இந்தப் பிரச்சினை தொடர்பான பேச்சுக்கள்  முடிந்த பின்னர், நிகழ்ச்சி நிரலில் காணப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது திடீரென குரல் கொடுத்த மஸ்தான் எம்.பி, 'காணிப் பிரச்சினைக்கு என்ன நடந்தது?' என வினவினார்.
இதன்போது, கூட்டத்தில் பங்கேற்றிருந்த அதிகாரிகளும் அரசியல் முக்கியஸ்தகர்களும் பெரிய சத்தத்துடன் சிரித்தனர்.
இணைத்தலைவர் மஸ்தான் எம்.பி, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அப்போது தான் விழித்துள்ளார் என்பது பற்றி, அப்போதுதான் தெரிய வந்தது.

0 commentaires :

Post a Comment