உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

6/08/2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவ., 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் வேட்பாளராக போட்டியிட 2,383 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற வேண்டும் என்ற நிலையில், தேவையான ஓட்டுகளை பெற்று வெற்றக பெற்றதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வாகியுள்ளார். முன்னதாக குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் உத்தேச வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கபட்டு விட்டார். இதனையடுத்து அடுத்த அதிபர் பதவியை கைபற்ற ஹிலாரி, டிரம்ப் இடையே போட்டி நடைபெறவுள்ளது.


0 commentaires :

Post a Comment