உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/05/2016

'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...!'- ராம்குமார் பரபரப்பு தகவல்!

சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பு கிளப்பியுள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 24 ம் தேதி சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு  கொலையானார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான  மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டார். கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

சிகிச்சைக்குப்பின் சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமார், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ராம்குமாரின் சார்பாக இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராம்குமாரின் வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த மனுவில், தனக்கும் சுவாதியின் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிவித்துள்ள ராம்குமார், கைது செய்யப்பட்டபோது தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினருடன் வந்தவர்கள்தான் தன்னை பிளேடால் கழுத்தை அறுத்ததாகவும் சொல்லியுள்ளார்.

0 commentaires :

Post a Comment