8/13/2016

வீரமுனை படுகொலை; 26ஆவது நினைவு தினம்

அம்பாறை, வீரமுனைப் பிரதேசத்தில்  தமிழ் மக்கள் 155 பேர் படுகொலை செய்யப்பட்டு 26 ஆவது வருட நினைவுதினம் இன்று (12)   அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.
படுகொலை இடம்பெற்ற வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில், அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மக்கள் சென்று ஆத்மசாந்தி வேண்டி சுடர் ஏற்றி பிரார்த்தித்தனர்.
1990ஆண்டு ஏற்பட்ட விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின்போது வீரமுனை கிராமத்தினை சூழவுள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம், வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வீரமுனை கிராமத்தில் இவ்வாறு தஞ்சமடைந்த மக்கள் மீது இராணுவத்தினரும், ஊர்காவற் படையினரும் நடத்திய தாக்குதல் காரணமாக 155 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment