உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/16/2016

துயர் பகிர்வு

ஆழ்வார்ப்பிள்ளை இராஜசிங்கம் மாஸ்டர், தனது 90வது வயதில்இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். தனது பிள்ளைகளின் அரசியல், சமூகப் பணி காரணமாக பல்வேறு நெருக்கடிகளையும் அச்சுறுத்தலையும் எதிர் கொண்ட ஆயிரக்கணக்கான தந்தையர்களில் இவரும் ஒருவர். நிர்மலா இராஜசிங்கம்,ராஜனி திரணகம, சுமதி சிவரூபன், வாசுகி இராஜசிங்கம் ஆகிய நான்கு பெண் ஆளுமைகளினதும் கல்வியாளர்களினதும், சமூக செயற்பாட்டாளர்களினதும் வழிகாட்டியாகவும் உற்ற தோழனாகவும் இருந்த இவர், யாழ்ப்பாண பல்கலைக்க...ழக மருத்துவ பீடப் பேராசிரியரும், "முறிந்த பனை" (Broken Palmyrah) நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான ராஜனி திரணகமவின் அரசியல் படுகொலையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டார்.
நாற்பது வருடத்திற்கு மேலான ஆசிரியத்துவ அனுபவம் கொண்டவர். யாழ்ப்பாண கல்லூரியின் (Jaffna College ) உப அதிபராக இருந்தவர் . வடமாகாண ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர். மிக எளிமையானவர்

,நன்றி முகநூல் *பெளசர்

0 commentaires :

Post a Comment