உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/17/2016

சு.க அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து பலர் நீக்கம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர், சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 40 பேர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்த நிகழ்வு,  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று புதன்கிழமை (17) முற்பகல் இடம்பெற்றது.
புதிய தொகுதி அமைப்பாளர்கள் 16 பேரும், மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேருமே ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
- See more at: http://www.tamilmirror.lk/179704/ச-க-அம-ப-ப-ளர-கள-பதவ-கள-ல-ர-ந-த-பலர-ந-க-கம-#sthash.nnU5Cv6q.dpuf

0 commentaires :

Post a Comment