Election 2018

8/22/2016

மரணத்தின் பிடியில் வீராங்கனைகள் : கொலைகார இந்திய ஒலிம்பிக் அமைப்பு

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய இந்திய வீராங்கனை  ஓபி ஜெய்ஷா. அவர் இந்த ஒலிம்பிக் போட்டியில்,  42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள்.live-india-athletics-7591
ஆனால் இப்போது ஏன்  இவ்வளவு மோசமான ஓட்டத்தை ஓடினார் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
எந்த ஒரு மாரத்தான் ஓட்டமும் மிகுந்த திட்டமிடலுடன் ஓட வேண்டிய ஒன்று. ஏனென்றால் தொடர்ந்த இயக்கத்தால் உடல் நீர் சத்து மற்றும் . தாதுக்களை இழந்து விடும். இவற்றைத் தொடர்ந்து  உடலுக்கு அளிக்காவிட்டால் கிராம்ப் என்ற தசைப்பிடிப்பு ஏற்படும். அது மட்டுமல்ல.. அதீத நீரிழப்பால் மரணமும் கூட சம்பவிக்கும்.
அதுவும் பிரேசில் போன்ற நீ  வெப்பமான இடங்களில் இது விரைவாக நடக்கும். இதைத் தவிர்க்க வழி நெடுக நீர் வழங்க வசதிகள்  செய்திருப்பார்கள்.
ஒலிம்பிக் மாரத்தானில் இந்த நீரையும் இதர சத்துப் பொருட்களையும் வழங்கும் நிலையங்கள் 2.5 கிலோமீட்டருக்கு ஒன்று என்று வைக்ககும்.
தலையைத் துடைத்துக் கொள்ள ஐஸில் நனைக்கப்பட்ட ஸ்பாஞ்ச் போன்றவை உள்ளூர் மாரத்தான்களில் கூட ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டருக்கும் நீர், எலுமிச்சை, உப்பு, ஆரஞ்சு, வாழைப்பழம், கடலைமிட்டாய் என்று வைத்திருப்பார்கள். இது அடிப்படை.
ஒலிம்பிக்கிலும் இப்படி இருந்தது. அதாவது மற்ற நாட்டினர் இப்படியோர் ஏற்பாட்டை செய்திருந்தார்கள். இந்தியா சார்பில் இந்த அடிப்படை வசதியைக்கூட செய்யவில்லை.

0 commentaires :

Post a Comment