உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/30/2016

இவர் தோழர் திருவுடையான்.

'கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்' என்ற விருமாண்டி படப் பாடலை பாடியவர் இவர்தான். இவர் தோழர் திருவுடையான். இது தவிர வேறு பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.
கச்சேரிகளில் பக்திப் பாடல்களைப் பாடிக் கொன்டிருந்தவரை அறிவொளி இயக்கம் ஆகர்ஷித்து முற்போக்குப் பாடகனாக்கியது.
பின்னர் மக்களுக்காக வீதிகளில் பாடினார்.
போராட்டக் களங்களில் பாடினார்.
...
தமிழா நீ பேசுவது தமிழா!
என்ற பாடலை இவர் பெருங்குரலெத்து பாடினால் பாமரருக்கும் மொழியுணர்வு பிறக்கும்.
ஆத்தா ஒஞ் சேல . . . . . பாடினால் தாயின் அன்பு பற்றிய ஞாபகத்தில் அழுகை வரும்.
நான் எப்போது சங்கரன்கோவிலுக்கு போனாலும் கட்சி ஆபிஸ்க்கு போய்விடுவேன். இரவு நேரத்தில் திருவுடையான் வருவார்.
தோழர்கள் திருவுடையான் , முத்துப்பாண்டி ஆகிய இருவரும் அடிக்கும் காமெடிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள்.
திருவுடையான் எங்களுக்காகவே எனக்கும் தம்பி பேச்சிமுத்துக்கும் பாடிக்காட்டுவார்.
தோழர்.நல்லுசாமி வேணுமென்றே அவரது இடுப்பில் விரலால் இடித்து விடும்போது துள்ளிக் குதித்து ஓடுவார்.
இனி சங்கரன்கோவில் கட்சி ஆபிஸ்க்கு போனால், அவர் அங்கு வர மாட்டார். கின்டல், கேலி இருக்காது. பாட்டு சத்தம் கேட்காது. தெத்துப்பல் தெரிய 'ஏ என்னப்பா' என்று என்னை அழைக்கும் அந்த பாசக்குரல் இனி என்னை வாஞ்சையுடன் வரவேற்காது.
ஆம். இன்று திருவுடையான் இறந்துவிட்டார்.
அழுகை வராததுபோல நடித்தாலும் மீறி வெடிக்கிறது அழுகை

நன்றி முகநூல் Prabhu Jeevan.

0 commentaires :

Post a Comment