உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/18/2016

கொக்கிளாய் தமிழர் இடம் என்று கூறுவதற்கு த.தே. கூட்டமைப்பிற்கு எந்த உரிமையும் கிடையாது; நல்லாட்சி நாயகன் ராஜித சேனாரட்ன

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முடிவெடுக்கும் அதிகாரம்
இல்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நல்லாட்சி நாயகன்
 ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தம் கருத்து தெரிவிக்கையில்,

கொக்கிளாய் ஒரு தமிழர் இடம் என்று கூறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த உரிமையும் கிடையாது, அதற்கு காரணம் இந்த விகாரை பல வருடங்களாக இங்குதான் காணப்படுவதாக ராஜித குறிப்பிட்டார்.

கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு கடந்த கால ஆட்சியில் ராஜித சேனாரட்ன தலைமையில் நீர் விநியோகம், பாதை புனரமைப்பு என்பன இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் விகாரையை அகற்ற யாருக்கும் உரிமை கிடையாது எனவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் இருக்கக்கூடிய சிலர் இவ்வாறான கடின கருத்தினை முன்வைக்கின்றனர். இதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொக்கிளாய் தமிழர் வாழும் இடமாக இருந்தாலும் மத வழிபாட்டுக்குரிய தலம் என்பதனால் இதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார்.

0 commentaires :

Post a Comment