உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/09/2016

சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டு வருவதற்கான சூழல் வடமாகாணத்தில் ஏற்படவில்லை- முதலமைச்சர்

  சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டு வருவதற்கான சூழல் வடமாகாணத்தில் ஏற்படவில்லை. அவ்வாறான சூழல் இல்லாத போது எவ்வாறு சமாதானத்தினைக் கொண்டு வர யோசிக்கின்றீர்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி யோடி கரஸ்கோ முனாஸிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி யோடி கரஸ்கோ முனாஸ் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
சந்திப்பின் போது, இலங்கையில் சமாதானம் குறித்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை ஆராயவும், எந்தளவில் சர்வதேச நாடுகள் உதவியாக இருக்க முடியுமென்பதனை அறிந்து கொள்ளவும் வருகை தந்திருப்பதாக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment