9/04/2016

இலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம் தரமுயர்வு!

இலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம் தரமுயர்வு!-காரைதீவு சகாஇலங்கையின் 153வது தேசிய பாடசாலையாக திருக்கோவில் வலயத்திலுள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
திருக்கோவில் வலயத்தின் இரண்டாவது தேசிய பாடசாலை இதுவாகும். ஏலவே இவ்வலயத்தில் அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா என்றொரு தேசியபாடசாலை உள்ளது.
...
1958ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 58வருடகால வரலாற்றைக்கொண்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் 12வது அதிபரான அதிபர் சோமசுந்தரம் ரவீந்திரன் தேசிய பாடசாலையின் முதலாவது அதிபராக பணியேற்கிறார்.
தேசியபாடசாலையாக்குவதில் அதிபரது முயற்சி இதுவிடயத்தில் அபரிதமாகவிருந்ததாக கல்விச்சமுகம் கருதுகிறது.
இங்கு 1216மாணவர்களும் 54ஆசிரியர்களுமுள்ளனர்.வலயத்திலுள்ள 1ஏபி பாடசாலையான இங்கு வருடாந்தம் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் தொகை படிப்படியாக அதிகரித்துவருகிறது.
நீண்டகாலமாக இத்தரமுயர்த்தல் முயற்சிகள் இடம்பெற்றுவந்தபோதிலும் தற்போதுதான் கல்வியமைச்சு இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை வழங்கியுள்ளது.
தேசியபாடசாலையாக தரமுயர்த்தலில் சம்பந்தப்பட்டு முழுமூச்சாக உழைத்த ஒத்துழைத்த முன்னாள் அமைச்சர் பி.தயாரத்னா கிழக்கு தவிசாளர் கலப்பதி த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஆளுநருக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் சமுக அமைப்புகளுக்கும் பாடசாலைச்சமுகம் தமது நன்றியறிதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
கடிதம் கையளிப்புவைபவம்!
கல்வியமைச்சு வழங்கிய தரமுயர்த்தலுக்கான உத்தியோகபூர்வ கடிதத்தைக் கையளிக்கும் வைபவமும் ஆசிரி;யர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வும் புதனன்று பாடசாலையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கடிதத்தை உத்தியோகபூர்வமாக அதிபர் ரவீந்திரனிடம் வழங்கிவைத்தார் .
கோடீஸ்வரன் எம்.பி.பேசுகையில்: பாடசாலை தரமுயர்வு மகிழ்சியளிக்கின்றது.அதற்கேற்றாற்போல் மாணவர்களும் ஆசிரியர்களும் மாறி அளப்பரியசாதனைகளை அடைவுகளைப் பெறவேண்டும் என்றார்.
சிரேஸ்ட ஆசிரியை ஜெகதீஸ்வரிநாதன் பேசுகையில் இங்கு பொருத்தமான நூலகக்கட்டமில்லாமலுள்ளது.எனவே நூலகத்திற்கென தனியான பொருத்தமான கட்டடத்தையும் நூலகரையும் பெற்றுத்தரவேண்டும் என வேண்டுகின்றேன் என்றார்.
உதவி அதிபர் எஸ்.பி.நாதன் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துப்பேசினார்.

நன்றி *முகநூல்

0 commentaires :

Post a Comment