9/18/2016

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்குதல்: 17 படையினர் பலி

Résultat d’images pour ஜம்மு காஷ்மீரில் இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஷ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளர்.அதில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது,

எல்லையில் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகிலுள்ள ஊரி பகுதியில் இருக்கும் படைத்தளத்தில் ஊடுருவிய நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு படை முகாம்களில் நுழைந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை தொடங்கினர்.
காயமுற்ற படையினரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சம்பவ இடத்தை பார்வையிட இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் விரைந்துள்ளார். இன்று மாலை அவர் ஊரியை சென்றடைவார் என்று தெரிகிறது.
காஷ்மீரில் நிலவி வரும் அமைதியற்ற சூழ்நிலையால் இந்திய உள்துறை அமைச்ச்சர் மேற்கொள்ள இருந்த சீன மற்றும் அமெரிக்கப் பயணங்களை ரத்து செய்துள்ளார்.

0 commentaires :

Post a Comment