9/19/2016

சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்

வலைத்தளங்கள் மூலமாக பல்வேறு குற்றச்செயல்களும் , சமூக சீரழிவுகளும் அதிகரித்துச் செல்லும் நிலை காணப்பட்டாலும், சமூக வலைத்தளங்கள் மூலமாக பல நல்ல விடயங்களும் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்காக பயன்படுத்துகின்ற ஒரு நிலை பலரிடம் காணப்படுகின்றது. மறு புறத்தில் எமது தழிழ் சமூகத்தில் சமூகம் நோக்கிய சிந்தனைகள் இளைய தலைமுறையில் மறைந்துவருவதனைக் காணமுடிகின்றது. தானும் தனது குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்கின்ற மனநிலை பலரிடத்தில் காணப்படுகின்றன.

சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒன்றிணைகின்ற பலர் தங்களுக்குள் ஏற்படுகின்ற புரிந்துணர்வுகளின் அடிப்படையில் சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற ஒரு சிந்தனைக்களம் உருவாக்கப்பட்டு செயலில் சமூகம் நோக்கிய சிந்தனைகளுடன் பயணிக்கும் நிலை மட்டக்களப்பில் உருவாகியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த பல நண்பர் சமூக சேவை நோக்குடனான ஒரு அமைப்பினை ஆரம்பித்து மக்களுக்கு அரசியலுக்கு அப்பால் சேவை செய்யவேண்டும் எனும் நோக்குடன் புதிய ஒரு சமூக சேவை அமைப்பினை இன்று ஆரம்பித்துள்ளனர்.
செங்கலடி கொம்மாதுறை ஹொட்டல் நிருதாவில் இன்று (18.09.2016) இடம்பெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலுமிருந்து பலர் கலந்துகொண்டனர்.  இதன்போது நிருவாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டதோடு இவ் அமைப்பானது அரசியல் சார்பற்ற சமூக அமைப்பாக செயற்படவுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment