உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/01/2016

துாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்டார்

வடகொரியாவில், அதிபரை அவமதிக்கும் வகையில், ஆலோசனைக் கூட்டத்தில் துாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்டதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது; அங்கு, ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன் அண்டை நாடான தென்கொரியா, உளவுத்துறை மூலம் செய்திகளை சேகரித்து, அவ்வப்போது அம்பலப்படுத்தி வருகிறது.

நேற்று, தென்கொரியா அரசு வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியா கல்வி அமைச்சரை, அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் யுன், கடந்த மாதம், சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சர்வாதிகார போக்கு உடைய அதிபருக்கு, கல்வி அமைச்சர் கிம் யோங் ஜின், கட்டுப்படவில்லை. சமீபத்தில், அதிபர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, கல்வி அமைச்சர் துாங்கினார். இதனால், ஆத்திரமடைந்த அதிபர், அவரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்' என, தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

0 commentaires :

Post a Comment