9/04/2016

எதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார் -மாவை

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஆளும்கட்சி ஜனாதிபதியோ, பிரதமரோ, அல்லது கையெழுத்திட்டு காணியை விடுவிக்கும் அதிகாரம் கொண்டவரோ அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் கூறியது போன்று தமது நிலத்தை முழுமையாக விடுக்கக் கோரி பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) நான்காவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், இது குறித்து மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், அந்த காணிகளை விடுவிக்குமாறு கோருவதற்கும், போராடுவதற்கும் அந்த மக்களுக்கு உரிமை இருப்பதாவும் கூறினார்.

அன்று போராட்டம் நடத்திய போது, சம்பவ இடத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாதுகாப்பு செயலாளர் காணிகளை விடுவிப்போம் என்று கூறியதற்கு அமையவே, எதிர்க்கட்சித் தலை வரும் காணிகள் இரண்டு வாரங்களில் பரவிப்பாஞ்சான் பகுதி காணிகள் விடுவிக்கப்படும் என வாக்குறுதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment