உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/08/2016

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெளியீடு..

எதிர்வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் வெளியீடான வெண்கட்டி இதழ் வெளிவரவுள்ளது. கடந்த காலங்களில் வெளிவந்த இதழ்கள் மானுட ஸ்பரிசம் கொள்ளும் விருதுகளையும் வேர்களைகளையும் தோற்றுவித்ததனால் அது மக்களிடையே வேர் கொண்டு கிளைபரப்பியிருந்தது.

வாசகர்கள் தந்த ஒத்துழைப்பும் ஆதரவும் தொடந்து இத்தகைய அக்கினி பரீட்சையில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான துணிவை தந்தது. வழமைப் போல் இம்முறையும் வாசகர்களிடமிருந்து ஆக்கங்களை எதிர் பார்க்கின்றோம். சகல விதமான தொடர்புகளுக்கும் திரு. எம். எஸ். இங்கர்சால், பத்திரிகை மற்றும் பிரச்சாரக் குழுத் தலைவர், இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்,
18, ஹட்டன் ஹவுஸ் ரோட், ஹட்டன் என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல், leninmathivanam@gmail.com.


தோழமையுடன்,
எம். எஸ். இங்கர்சால்
பத்திரிகை மற்றும் பிரச்சாரக் குழுத் தலைவர்,
இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்

0 commentaires :

Post a Comment