9/21/2016

மக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்பு வேண்டும்!

'மக்களினது அரசியலமைப்பை நோக்கிய செயற்பாடு' எனும் தொனிப் பொருளில், நேற்று 20.09.2016 செவ்வாய் மாலை கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா திறந்த வெளி அரங்கில் பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஆரம்பித்த ஊர்வலம், அலறி மாளிகை அருகே நிறைவுற்றது. நாட்டின் நாலா புறங்களிலும் இருந்து எல்லா சமூகங்களின் சார்பாகவும், ஆண்களும் பெண்களுமாய் பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
...
மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளும் பிரேரணைகளும் அடங்கிய மனுவொன்று பிரதமர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்காகவே இது கையளிக்கப்பட்டது.
பல்வேறு சிவில் அமைப்புகளும் தனிநபர்களும் ஒன்றிணைந்து இதனை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியலைப்பு மக்களின் நலன் சார்ந்ததாக அமைய வேண்டும். சமத்துவம், கௌரவம், பொருளாதார நீதி குறித்து அது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சமத்துவம் இன்மை, பொருளாதார அநீதி, வறுமை, இடர்பாடுகள் போன்ற அடிப்படை அம்சங்கள் குறித்து புதிய அரசியலமைப்பு கவனம் செலுத்தாதுவிடின், நீதி அல்லது சமாதானத்தின் அடிப்படைகளையே அது மறுதலித்து விடும்.
அரசியல் சுதந்திரம், எல்லோருக்கும் வாய்ப்புக்களை வழங்கும் வகையில் வளங்களையும் செல்வத்தையும் பகிர்ந்தளித்தல், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களை புதிய அரசியலமைப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது இந்த மக்கள் செயற்பாட்டின் பிரதான கருப்பொருளாகும்.
அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவிற்கு சமர்ப்பித்த யோசனைகளின் அடிப்படையிலேயே, புதிய அரசியலமைப்பு வரையப்பட்ட வேண்டும் எனவும் இங்கு வலியறுத்தப்பட்டது. 

0 commentaires :

Post a Comment