9/01/2016

கனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியில் கிருஸ்தவ அமைப்புகளா ?

கனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியில் கிருஸ்தவ அமைப்புகளா ? விளக்கமளிக்கிறார் இந்து சம்மேளன தலைவர் அருண்காந்த்"


Résultat d’images pour boudha srilanka

கடந்த 30 வருட யுத்தம் என்பது கிருஸ்தவ மிஷனெரிகளின் தலைமையின் வழிகாட்டுதலிலும் ஏட்பாட்டிலும் நடந்தத விளைவாகவே தமிழ் சமூகம் வழிதவறி போய் இன்று கேட்பார் அற்று நிட்கிறது. அனகாரிக தர்மபால அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பௌத்த மதத்தின் எழுச்சி கிறிஸ்தவத்தின் மதமாற்றத்தை தடுத்தது அதே சமயம் ஆறுமுக நாவலரின் சைவ தொண்டின் நிமிர்த்தமாக இந்துவின் ஆதிக்கமும் உறுதியானது. இதனால் இரு பக்கங்களிலும் வலுவிழந்த கிருஸ்தவ மிஷனெரிகள் சிங்கள தமிழ் இன முறுகளை இருபக்கங்களில் இருந்தும் அழகாக நகர்த்தி யுத்தம் வரை கொண்டுவந்து தங்களை காத்துக்கொண்டனர்.

யுத்தத்தை காரணமாக வைத்தே மதமாற்றங்களை நடாத்தி தமிழர் பாரம்பரியங்களை அழித்து கிருஸ்தவமயமாக்கிக்கொண்டு இருந்தனர். ராஜப்பு ஜோசப், இமானுவேல் போன்றவர்களின் மிஷனெரிகள் இதனை மிக சரியாக பயன்படுத்தியுள்ளனர் என்பதை மன்னார் மாவட்டத்தின் மாற்றத்தினூடாக அறியமுடியும். இவை பற்றி பல்வேறு இந்து தலைவர்களால் கூறப்பட்டு வந்துள்ள நிலையிலும் கிருஸ்தவமயமாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட "தமிழ் தேசியம்" என்ற கொள்கையின் மூலமாக ஊடகம் முதல்கொண்டு உணர்வாளர்கள் வரை தங்கள் வலைக்குள் இழுத்துக்கொண்டு தங்களுக்கு எதிரான கருத்துக்கள் மக்களை அடையாதவண்ணம் காத்து வருகிறார்கள் அது இன்றளவிலும் தொடர்வது வருத்தமான விடயம் மட்டும் இன்றி ஆபத்தான விடயமும் கூட. ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடிக்கும் விதமாகா ராஜப்பு ஜோசப் தலைமையிலான லூர்து மாதா ஆலய குழு திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்தத்தை கைப்பற்றியதோ அன்றே மக்கள் சற்று விழிக்க ஆரம்பித்தனர். இந்து சம்மேளனம் இத்தனை நாட்களாக கூறி வந்தது உண்மை என்று மன்னார் இந்துக்கள் உணரத்தொடங்கி உள்ளனர். இவ் விடயம் தொடர்பாக செய்திகளை கூட ஊடகங்கள் பிரசுரிக்க மறுத்தும் அல்லது முக்கியத்துவம் கொடுக்காது தட்டிக்கழித்தும் இந்து சம்மேளனத்தின் அயராத முயற்சியால் இயன்றளவு விழிப்புணர்வு செய்யப்பட்டு நாடுமுழுவதும் ஒரு தெளிவூட்டலை வழங்கியுள்ளோம் என்றே கருதுகிறோம் இதன் மூலம் கிருஸ்தவ மிஷனெரிகளின் முகத்திரைகள் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னாரில் சகல மக்களும் பாகுபாடு இன்றி வாழ்ந்து வருகிறோம், அதனை பயன்படுத்தி மதத்தினூடாக  அரசியலை கொண்டு சென்று தமிழ் தமிழ் என வேறு திசையில் இந்துக்களை திசைதிருப்பி விட்டு மறுபக்கத்தில் கிருஸ்தவமயமாக்கப்பட்டு வந்ததையும், தமிழர்கள் நசுக்கப்பட்டு வந்ததையும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளோம். எங்கள் சகோதரத்துவத்தை பயன்படுத்தி அவர்கள் செயல்பாடுகளை முன்னெடுத்து எங்களை கொச்சைப்படுத்தியுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. யுத்தத்தின் விளைவுகளான ஏழ்மை, தலைமைத்துவமற்ற குடும்பம், அங்கவீனம் போன்றவை இருந்தால் தான் கிருஸ்தவ மயமாக்கல் வெற்றி பெரும். இவை இன்னம் சிலகாலம் சென்றதும் மக்கள் மத்தியில் சலசலத்துவிடும்.

எனவே சிங்கள தமிழ் முறுகல் நிலையானது என்றும் தொடரவேண்டும் அப்பொழுதான் அவர்கள் மீதும் பார்வை திரும்பாது என்பதால் தான் நிரந்தர எதிரியா சிங்களவர்களுக்கு தமிழர்களும், தமிழர்களுக்கு சிங்களவர்களும் இருக்கும் வண்ணம் தீய செயல்களை செய்கிறார்கள் இதற்கு முட்டுக்கட்டையாக இந்து சம்மேளனம் இருப்பதால் அதனை அழிக்கும் வேலையையும் பௌத்த இந்து நல்லிணக்க செயட்பாடுகளை தடுக்கும் வண்ணம் இந்து சம்மேளன தலைவர் அருண்காந்த்தையும் அடக்க முயல்கிறார்கள்.

கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட பின்னர் பௌத்த அமைக்களுடன் இது தொடர்பாக தெளிவான பார்வையின் அவசியத்தை கூறி முறுகல் நிலையை கட்டுப்படுத்தியதால் அருண்காந்தின் மீது கோபமுற்று தொலைபேசியினூடாக கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். மேலும் அந்த நபர் தெரிவிக்கையில் " தாங்கள் பௌத்தர்களுக்கு எதிரான போரை ஆரம்பித்துவிட்டதாகவும், இனிமேல் பௌத்த இந்து ஒற்றுமை நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டாம் என்றும் மீறும் பட்சத்தில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என்றும் தெரிவித்ததை அடுத்து அருண்காந்த் அவர்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர அவர்களிடம் குறித்த சம்பவம் பற்றி முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளார். பொலிஸ் தரப்பில் இருந்து "வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment