9/19/2016

தேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்தில் கல்முனை, களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலை தெரிவு

காரைதீவு நிருபர் சகா...

2015ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதினை கிழக்கு மாகாணத்தில் இரு வைத்தியசாலைகள் சுவீகரித்துள்ளன.
மத்திய அரசின் பரிபாலனத்தின்கீழுள்ள ஏ தர பெரிய ஆதாரவைத்தியசாலை பிரிவில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை ஆதார வைத்தியசாலை உற்பத்தித்திறன் விருதின் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. Afficher l'image d'origine
கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர்.இராசரெத்தினம் முரளீஸ்வரன் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்தாண்டு போட்டியில் தமது வைத்தியசாலை ஆறுதல் பரிசை சுவீகரித்துக்கொண்டது.இம்முறை மூன்றாமிடம் கிடைத்துள்ளது.அடுத்தமுறை முதலாமிடத்தைப் பெறலாமென்று நம்புகின்றோம் என்றார்.
சுமார் 550 உத்தியோகத்தர்களுடனும் 72 வைத்திய அதிகாரிகளுடனும் பாரிய நிலப்பிரப்பில் இவ் ஏ தர ஆதாரவைத்தியசாலை மத்தியஅரசின் பரிபாலனத்தின்கீழ் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2வருடங்களாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் முரளீஸ்வரனின் அயராத முயற்சியினால் அவரது குழாத்தினரின் ஒத்துழைப்புடன் இவ்விருதினை இரண்டாவது தடவையாகப் பெற்றுள்ளார்.
மாகாணஅரசின் பரிபாலனத்தின்கீழுள்ள பி தர ஆதாரவைத்திய சாலைப்பிரிவில் மட்டு.மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை உற்பத்தித்திறன் விருதின் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் உறுதிப்படுத்தினார்.
சுமார் 75 உத்தியோகத்தர்களுடனும் 20 வைத்திய அதிகாரிகளுடனும் இவ் பி தர ஆதாரவைத்தியசாலை மாகாணஅரசின் பரிபாலனத்தின்கீழ் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்ததடவை இவ்வைத்தியசாலை 3ஆம் இடத்தைப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 4வருடங்களாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சுகுணனின் அயராத முயற்சியினால் அவரது குழாத்தினரின் ஒத்துழைப்புடன் இவ்விருதினை தொடர்ச்சியாகப் பெற்றுவருகின்றார்.
நன்றி முகநூல்

0 commentaires :

Post a Comment