9/18/2016

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-புஸ்ஸல்லாவை பகுதியில் பதற்றமான சூழல்

பிடியாணை பிறப்பிக்கபட்ட நிலையில் புஸ்ஸல்லாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன், தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக புஸ்ஸல்லாவை பொலிஸார் கூறினார்.
புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிச்சந்திரன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு ஊயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலையின் யன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த இவரை, பொலிஸார் மீட்டு வைத்தியசாலைக் கொண்டுச் செல்லும்போது, அவர் வழியில் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார்     தெரிவித்தனர்.

பிடியாணை பிறப்பிக்கபட்ட நிலையில் புஸ்ஸல்லாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன், தூக்கில் தொங்கிய உயிரிழந்ததைத் தொடர்ந்து புஸ்ஸல்லாவை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. புஸ்ஸல்லாவை பிரதான வீதியில் ஒன்றுதிரண்ட பிரதேச மக்கள், இளைஞனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, புஸ்ஸல்லாவை பிரதான வீதி வழியான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில், அமைச்சர் பா.திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உருப்பினர் வேலுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/182119/ப-ஸ-ஸல-ல-வ-ய-ல-பதற-றம-#sthash.sU3qV9Mw.dpuf

0 commentaires :

Post a Comment