9/12/2016

தெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: பிலிப்பைன்ஸ் அதிபர் கருத்து

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள படையினர்களுக்கு பயிற்சி அளித்துவரும் அமெரிக்கா சிறப்பு படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ கூறியுள்ளார்.
அந்த பகுதியில் அமெரிக்காவின் இருப்பு , நிலைமையை இன்னும் கொந்தளிப்பாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கிலிருந்து முதன்முதலாக அதிபர் பதவிக்கு வந்துள்ள டுடெர்டோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் போராளிகளிடம் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி உள்ளார்.
பல தசாப்தங்களாக அங்கு நடைபெற்று வரும் வன்முறைகளில் சுமார் 1,50,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
புதிய அதிபராக அவர் பதவிக்கு வந்ததில் இருந்து சட்டவிரோத போதை பொருள் வர்த்தகம் தொடர்பாக அவரது நிர்வாகம் தொடுத்து வரும் வன்முறைத் தாக்குதல்களை அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்த்து.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா பிலிப்பைன்ஸ் இடையே ஆன உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.
அதிபர் ஒபாமா டுடெர்டோவுடன் கடந்த வாரம் நடத்தவிருந்த சந்திப்பை ரத்து செய்திருந்தார்.

0 commentaires :

Post a Comment