10/14/2016

இன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் பிறந்தநாள்

Official Photographic Portrait of C. W. W. Kannangara (1884-1969).jpg
இன்று 13/10/   இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் பிறந்தநாள்

யார் இந்த கன்னங்கரா? வரலாற்றின் பக்கங்கள் மக்கள் சேவகர்களை மறைத்து இனவாதிகளையும் பித்தலாட்டக்காரர்களையும் மக்கள் விரோத அரசியல் செய்து மக்களை அழிவுக்கு தள்ளியவர்களையும் தலைவர்களாய் தந்தைகளாய் தளபதிகளாய் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது.

இதனால்  இன உரிமை பற்றியும் இன விடுதலை பற்றியும் பேசுவதையே தம் வரலாறாய் கொண்டவர்கள் தாம் மக்களின் அடிப்படை உரிமைகள் விடயத்தில் எப்படி நேர்மாறாக  செயல்பட்டு வந்துள்ளனர் என்பதை   வரலாற்றின் பக்கங்களில் இருந்து சாதுரியமாக மறைத்து விடுகின்றனர் .

இந்நிலையில் இலங்கையில் இன ,மத, சாதி ,வர்க்க பேதமின்றி அனைவருக்கும் இலவச கல்வியை கொண்டுவந்த  கன்னங்கராவின் பிறந்த தினத்தை நாம் கொண்டாட வேண்டும் .அவருடைய 132வைத்து பிறந்ததினம் இன்றாகும்.

 இந்த இலவச கல்வி மசோதா சட்டசபைக்கு  1944 ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த இலவசக் கல்வித்திட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்ப்பதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம்,  அருணாசலம் மகாதேவா, சிறிபத்மநாதன் என்கின்ற யாழ்-தமிழ் பெரும் தலைவர்கள் ஒற்றுமையாக நின்றுசெயல்பட்டனர்..

யாழ்ப்பாண உயர்தர வர்க்கத்தைத் தவிர தலித் மக்களும் கிழக்கிலங்கை மக்களும் தென்னிலங்கை மக்களும் கல்வியறிவு பெறக்கூடாது என்பதில் இந்த யாழ்ப்பாணத் தலைமைகள் மிகக் கவனமாக செயற்பட்டனர். பாமர மக்களுக்கு அறிவுப் பொக்கிசத்தைத் திறந்துவிட முனைந்த சிங்கள அரசியல்வாதியான டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் யாழ்- தலைமைகளே துரோகங்களின் பிறப்பிடமாய் இருந்திருக்கிறார்கள். கல்வியில் பின்தங்கியிருந்த யாழ்ப்பாண தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிழக்கிலங்கை தென்னிலங்கைப் பிரதேசங்களுக்கும்  அவ்வாய்ப்புகள் கிடைக்காது தடுக்க முயன்ற யாழ்ப்பாணத் தலைமைகளின் வஞ்சகத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வரலாறுகள் இதுவரை வாய்ப்பளிக்கவில்லை.

அதே வேளை கிழக்குமாகாண அரசசபை பிரதிநிதியான  வ.நல்லையாதான் கன்னங்கராவின் இலவச கல்வி திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து இலங்கை எங்கும் சாமானிய மக்களை நோக்கி கல்வி அறிவினை திறந்துவிட அரும்பாடு பட்டவராகும்.இவர் காலத்தில்தான் கிழக்கிலங்கையின் காணப்படும் 90 வீதமான அரச பாடசாலைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த கன்னகராவுக்கோ மட்டக்களப்பு நல்லையாவுக்கோ வடக்கு கிழக்கு நகரங்களின் மத்தியில் யாதொரு சிலையும் இன்றுவரை இல்லை என்பது வேதனைத்தரும் செய்தியாகும்.  மக்கள் விரோத தலைமைகளுக்கு சிலையெழுப்பும் நாம் சாதி, மத, இன, வேறுபாடுகளின்றி அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கிய தலைவர்களை கொண்டாடுவதில்லை
.

1 commentaires :

Anonymous said...

http://www.thinakaran.lk/2017/10/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/20481

Post a Comment