10/10/2016

மலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்


மலையக தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து '1,000 ரூபா நாள் சம்பளத்தை வழங்கு' என வலியுறுத்தி எதிர்வரும் 11.10.2016 செவ்வாய்க் கிழமை மு.ப. 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் கவனயீ...ர்ப்பு போராட்டம் நடாத்தப்படவுள்ளது.

எமது தேசத்தினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் காணியோ, சொந்த வீடோ இன்றிப் பல்வேறு உரிமை மறுப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற சூழ்நிலையில், அவர்களுக்கு மேலும் மேலும் துன்பத்தை ஏற்படுத்துகின்றவகையில் அவர்களுடைய உழைப்புக்கேற்ப ஊதியத்தினை வழங்காது தோட்ட நிர்வாகங்களும், முதலாளிமாரும் அவர்களின் உழைப்பைச் சுரண்டிவருகின்றனர். 18 மாதங்களுக்கு மேலாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது இழுத்தடித் வருகின்ற நிலைமையிலேயே தொழிலாளர்கள் இனியும் பொறுக்கமுடியாது என்ற சூழ்நிலையில் வீதிக்கு இறங்கியிருக்கிறார்கள்.

எனவே, பாதிக்கப்படுகின்ற மலையகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைவரும் அணிதிரண்டு குரல்கொடுக்கவேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும். எனவே இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.

0 commentaires :

Post a Comment