10/21/2016

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? – டக்ளஸ் தேவானந்தா!


கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியபடி இணைந்த வடக்கு கிழக்கிற்குள் சமஷ்டி அடிப்படையிலான தீவை பெற்றுக் கொடுக்கத் தவறுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடையும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரும், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ள கருத்தானது, கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் அதிருப்திகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தந்திரோபாயமாகவே கருதமுடிகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது –
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை 2016ஆண்டு நடுப்பகுதிக்குள் பெற்றுத்தருவதாக கூறியே தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டது.காலத்துக்குக் காலம், தேர்தலுக்குத் தேர்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே காலாவதியாகிப் போயிருக்கின்றது.
அந்த வகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறியும், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும், படையினர் வசமுள்ள எமது மக்களின் நிலங்களை முழுமையாக மீட்டுத் தருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கினார்கள்.அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமலே காலவதியாகிப் போய்விடும் என்றே எண்ணத்தோன்றுகின்றது

2016ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள். பின்னர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அந்த வாக்குறுதியானது தனது வெறும் கணிப்புத்தான் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சித்தார்.
சம்பந்தனின் கருத்துக்குத் தமிழ் மக்கள் கடுமையான கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக மீண்டுமொரு வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். தற்போது அரசாங்கம் தயாரித்துக் கொண்டிருக்கும் புதிய அரசியல் யாப்பு திருத்த வரைபில் எவ்வாறான தீர்வு தமிழ் மக்களுக்குத் தேவை என்பதை கூட்டமைப்பு வெளிப்படையாக முன்வைக்கவில்லை.

இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு வாக்குறுதி வழங்கியபடி இணைந்த வடக்கு கிழக்கிற்குள் சமஷ்டி அடிப்படையிலான தீவை பெற்றுக் கொடுக்கத் தவறுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடையும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரும், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ள கருத்தானது, கூட்டமைப்பு மீதான தமிழ் மக்களின் அதிருப்திகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தந்திரோபாயமாகவே கருதமுடிகின்றது கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
புதிய அரசுடன் இணக்க அரசியல் நடத்திக்கொண்டு எதிர்க்கட்சித் தலைமைப் பதவி, நாடாளுமன்றக் குழக்களின் பிரதி தவிசாளர் பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைமைப் பதவி என்பவற்றையும் தமது குடும்பங்களுக்காக சொகுசு சலுகைகளையும் பெற்றுக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தமிழ் மக்களின் முன்னுரிமைக்குரிய பிரச்சினைகளான நிலங்கள் விடுவிப்பு,
காணாமல் போனோர் விவகாரம், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஏன் கூட்டமைப்பினரால் அர்த்தபூர்வமான பேச்சுக்களை அரசுடன் நடத்த முடியாது என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.

0 commentaires :

Post a Comment