உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/28/2016

நல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிகள் விவகாரம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை  நாளை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்  முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிரணி   எம்.பி. ரஞ்சித் டி சொய்சா சபையில் தெரிவித்தார். 
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகளை அங்கீகரிக்கும் சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே   அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 அவர் மேலும் உரையாற்றுகையில்
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் விவகாரம் குறித்த  கோப் குழுவின் அறிக்கை பூரணப்படுத்தப்பட்டு நாளைய தினம் வெள்ளிக்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில்  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் 15 நிமிடங்களுக்கு முன்னதாக அதாவது இன்று 3.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளார் .
அத்தோடு இந் நாட்டின் பிரஜையல்லாதவர் என்பதன் காரணத்தால் பிரதான நபரான அர்ஜுன மகேந்திரன் தப்பிச்சென்றுவிட்டார். அவருடைய கடவுச்சீட்டைக் கூட தடைசெய்ய முடியாத நிலைமை ஏன்? என்றும் கேள்வி தொடுத்தார்.
எனினும் ஆளும் தரப்பு உறுப்பினர் எவரும் இதற்குப் பதிலளிக்காது இருந்த நிலையில் ரஞ்சித் டி சொய்சா எம்.பி. தனது உரையைத் தொடர்ந்தார்.

0 commentaires :

Post a Comment