உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/21/2016

மாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு?

மாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு?


உயிரிழந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரில், ஒருவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விபத்தால் மற்றைய மாணவனும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) என்ற மாணவனின் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு இரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உடல்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.
விபத்து நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
இதனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் போது, பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலை வளாகத்தை ஆக்கிரமித்தனர்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் மாணவன் ஒருவனின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் அதனை சட்ட வைத்தியதிகாரி வெளிப்படுத்தவில்லை.

0 commentaires :

Post a Comment