10/20/2016

சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களால் ஏன் கோர முடியவில்லை?

செய்தி- ஈழத் தமிழர் நட்புறவு மையம் சார்பாக காசிஆனந்தன் திருநாவுக்கரசு சிவம் ஆகியோர் அ...ப்பலோ மருத்துவமனைக்கு சென்று திரும்பியுள்ளனர். முதல்வர் ஜெயா அம்மையார் விரைவில் குணமடைந்து தமிழக மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என ஈழத் தமிழர்கள் சார்பில் இவர்கள் கேட்டுள்ளார்கள்.
காசி ஆனந்தன்- புலிகளின் சார்பாக ராஜீவ் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தியவர். ராஜீவ் கொலையில் இவர் சேர்க்கப்படாதது மட்டுமன்றி சிறப்புமுகாமில்கூட இவர் அடைக்கப்படவில்லை. தமிழகத்தில் அகதி மாணவர்களுக்கு உயர் கல்வி வாயப்பு மறுக்கப்பட்ட நிலையில் இவருடைய இரு மகள்களும் மருத்துவ கல்வி பெற்று டாக்டர்களாக உள்ளனர்.
திருநாவுக்கரசு- புலிகளின் அரசியல் அலோசகர்களில் ஒருவராக இருந்தவர் என கூறுகின்றனர். முள்ளிவாய்க்காலில் கோத்தபாயாவின் கொலைக் கும்பலில் இருந்து எப்படி தப்பினார் என்று தெரியவில்லை. ஆனால் தடுப்பு முகாமில் இருந்து தப்பி சென்ற இவர் மன்னார் தீவு ஒன்றில் படகு பழுதாகி நின்ற போது அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பொலிஸ் மூலம் படகு அனுப்பி காப்பாற்றப்பட்டார் என கூறுகின்றனர். பிரபாகரனின் வயதான தாயாரையே திருப்பி அனுப்பிய கலைஞர் கருனாநிதி இவருக்கு மட்டும் ஏன் உதவி செய்தார் என்பதுதான் இன்னும் புரியவில்லை.
இந்தியாவில் தங்கியிருக்கும் இவர்கள் இதுவரை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதில்லை.
சாதாரண அகதி முகாம்களில் வாழும் அகதிகள் நிலையை மத்திய மாநில் அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதில்லை.
தமது பிள்ளைக்கு உயர் கல்வி வாய்ப்பை பெற்ற காசி அனந்தன் அகதி முகாம்களில் உள்ள அகதி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை.
இப்போதுகூட காவிரி பிரச்சனைக்காக தமிழகம் போராடுகிறது. அதற்கு ஆதரவாக இலங்கையில் இந்திய தூதராலயம் முன்பாக போராட்டம் நடந்துள்ளது. லண்டன் கனடாவில் கூட முன்னெப்போதும் இல்லாதவகையில் தமிழக மக்களுக்கு அதரவாக போராட்டம் நடந்துள்ளது.
இத்தகைய போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாத இந்த பிரமுகர்கள் , அகதிகளுக்காக எந்த கோரிக்கையும் முன்வைக்காத இவர்கள், ஜெயா அம்மையார் நலம் பெற வேண்டும் என கேட்கின்றனர்.
தமது சொந்த நலன்களுக்காக ஈழத் தமிழர்களின் பேரால் ஜெயா அம்மையார் நலம் பெற வேண்டும் எனக் கோருகிறார்கள்.
ஜெயா அம்மையாரால் சிறப்புமகாமில் எவ்வித குற்றச்சாட்டுமின்றி பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகள் இவர்களின் இந்த துரோகத்தை மன்னிப்பார்களா?

நன்றி *முகநூல் *பாலன் தோழர்

0 commentaires :

Post a Comment